top of page
Gradient

பணவரவை அதிகரிக்கும் லக்ஷ்மி  குபேர பூஜா நாணயம்..!!

செல்வத்திற்கு அதிபதி லட்சுமி. அதைக் கண்காணித்துக் காப்பவர் குபேரன். இவ்விருவரையும் இணைத்து லட்சுமி குபேர பூஜை 48 நாட்கள் தொடர்ந்து செய்து, குபேரரை அர்ச்சித்து சக்தியூட்ட பெற்ற லட்சுமி குபேர நாணயத்தை  அணு தினமும் பூஜையில் வைத்து வழிபட்டு வர, சீரான செல்வம்  நமக்கு வந்தடையும். இழந்த செல்வத்தையும், மீட்டுத் தரும். வட இந்தியாவில் லட்சுமி குபேரர் பூஜை மிகவும் பிரசிதிபெற்றது.

 

நம்முடைய வீட்டிற்குள் பணம் காசு எந்த தங்கு தடையும் இல்லாமல் வந்து கொண்டே இருக்க வேண்டும். வீண் விரயம் ஆகாமல் இருக்க வேண்டும் என்பது தான் நம்முடைய ஆசையாகவும், கனவாகவும் இருக்கின்றது. கர்ம வினையை நம்மால் தடுக்க முடியாவிட்டாலும் நிச்சயமாக குறைத்துக் கொள்வதற்கு ஆன்மீக ரீதியாக எவ்வளவோ வழிமுறைகள் உள்ளன. அதில் இந்த லட்சுமி குபேர நாணயத்தை வைத்திருப்பவர்க்கு வருமான உயர்வு உண்டாகும் என்பது திண்ணம்.

 

இந்த நாணயத்தை  அணு தினமும் பூஜையில் வைத்து வழிபட்டு வர,  தீராத துன்பங்கள் இதனால் நீங்கப் பெற்று வாழ்வில் சுபீட்சம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், ஊதிய உயர்வு, பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டிருப்பவர்கள், உங்களுடைய ஏதாவது ஒரு துறை சார்ந்த வளர்ச்சியை நோக்கி பயணிப்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள், சாதிக்க நினைப்பவர்கள் என அனைவருக்கும் fநல்ல வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் உண்டாகும். குபேர தேவன் செல்வத்தை மட்டுமல்ல நம்முடைய வாழ்க்கையில் நாம் அடைய வேண்டிய உயரத்தையும், வளர்ச்சியையும் தீர்மானிக்கிறார். நம்முடைய வளர்ச்சியே செல்வ வளத்தையும் நிர்ணயிக்கிறது.

bottom of page